Wednesday, December 28, 2011

திட்டமிடுதல்


                               திட்டமிடுதல் என்பது நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாகும் திட்டமிடாத வாழ்கை நங்கூரம் இல்லாத கப்பல் போன்றதாகும்நம்மில் பலர் கூறும் ஒரே மாதிரியான வழக்கு " எனக்கு இந்த வேலை செய்ய நேரமில்லை " என்பதேயாகும்இந்த நேரமில்லை என்பவர்களை பார்த்தால் நிச்சயமாக காலையில் நெடு நேரம் தூங்குபவர்களாக இருப்பார்ஒருவன் வாழ்வில் பாதிகாலம் தூங்கியே கழிக்கவேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும் அதனால்தான் பகல் பாதி இரவு பாதி என்று ஆண்டவன் படைப்பே உள்ளதுமிக பழமையான காலங்களில் இந்த " நேரமில்லை " என்ற வாசகத்தை கேட்டிருக்க முடியாதுஏன் என்றால் அவர்கள் அனைவருமே அதிகாலையில் துயில் எழுபவர்கலாகவே இருந்தனர்முற்காலத்தில் இரவு ஆறு மணிக்கு மேல் எந்த வேலையையும் செய்வதில்லை அதற்கேற்றாற்போல் மின்சாரம் என்பதோ மின் விளக்குகள் என்பதோ இல்லை பொழுது விழுந்த நேரத்தில் இந்த வேலைகளை செய்யாதே என்று ஒரு சில வாசகங்களை கேள்விபட்டிருப்பீர்கள் உதாரணமாக இரவு விளக்கு வைத்த பின்னர் ஊசி கொடுக்காதே ! விளக்கு வைத்த பின்னர் தயிர் கொடுக்காதே என்றெல்லாம் கேட்டிருப்பீர்கள்இவை எதனால் சொல்லப்பட்டனநம்மை பொருத்தவரை இவை அனைத்தும் மூடநம்பிக்கைகள் ஏன் ? நமக்கு புரியாத அனைத்தையும் மூட நம்பிக்கைகளாகவே நினைதுக்கொள்கிறோம்நாம் பார்த்தவற்றை ஒத்துக்கொள்கிறோம் பார்காததை மூடநம்பிக்கை என்று துவேஷம் செய்கிறோம்இன்னும் சிலர் சொல்வதை கேட்டால் ஜோதிடர் சொல்வதை உன்னைப்போன்ற முட்டாள்கள் நம்பலாம் நான் நம்ப தயாராக இல்லை என்று கூறுவதை கேட்டிருப்போம்கோவிலுக்கு போனால் எல்லாம் சரியாகிவிடுமா ? என்பதெல்லாம் அவர்கள் வாதம்நமது அறிவியல் அறிஞர்கள் சூரியனில் ஹீலியம் வாயு உள்ளதுநைட்ரஜன் வாயு உள்ளது இன்னும் ஒரு காலத்தில் சூரியன் வெடிப்புக்கள் பலமிழந்து தனது ஒளியை இழந்து இருண்டு போகும் என்கிறார்கள்இது இன்றைய அறிவியல் கூறும் எதிர்கால ஜோதிடமாகும்இதை சொன்ன அறிவியல் அறிஞன் பார்த்தானா ? அல்லது இதை பாடமாக படித்த அதி மேதாவிகள் பார்த்தார்களா ? யாரும் பார்க்கவில்லை ஆனாலும் இந்த செய்தியை குருட்டு தனமாக நம்பவில்லை ? இம்மாதிரியான அதி புத்திசாலிகள் தான் ஜோதிடம் பொய் என சொல்லித்திரிபவர்கள்இனிப்பு என்பது எப்படி இருக்கும் என்று கேட்டால் என்ன சொல்வார்கள் ? ஜிலேபி என்றால் சுருள் சுருளாக இருக்கும்கேக் என்றால் மெதுவாக இருக்கும்சீனி என்றால் பவுடர் பார்மில் இருக்கும்குலோப்ஜாமூன் சாலிட் மற்றும் லிக்விட் ஸ்டேட்ஆக இருக்கும்ஆனால் இனிப்பு எப்படி இருக்கும் என்பதை இன்றுவரை யாரும் வரையறுத்து சொல்லவில்லைஇதில் இருந்து என்ன தெரிகிறதுஒரு சில விஷயங்களை நீங்கள் உணர மட்டுமே முடியும்வாய்விட்டு சொல்ல முடியாது இதனால் தான் கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை என்று சொல்லி வைத்தார்கள்.
அறிவியல் வரையறுக்க முடியாத சில விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்உதாரணமாக ஈதர் என்ற ஊடகத்தைக் கூறலாம்இன்று வரை இந்த ஈதர் என்பது இது தான் என்று எந்த அறிவியல் அறிஞரும் வரையறுக்கவில்லைகாற்று உள்ள இடம் இல்லாத இடம்ஒளி உள்ள இடம் அல்லது இல்லாத இடம் போன்ற எல்லா இடங்களிலும் இருப்பது என்று கூறுகிறார்கள்அண்டம் முழுவதும் வியாபித்துள்ள இந்த ஈதரானது நம் உடலையும் ஊடுருவி செல்லக் கூடியது என்கின்றனர்இதைதான் அன்றைய ஆன்மிகம் அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் உள்ளது என்று சொல்லிவைத்தார்கள்.
ஜோதிடத்தில் சந்திரன் என்ற கிரகமானது தாயாரை குறிக்கும்அது மட்டுமல்ல இது ஒரு ஜல கிரகமாகும்ஜல கிரகமென்றால் தண்ணீரை குறிக்கும் கிரகமாகும்சந்திரனில் தண்ணீரே இல்லை உயிர் வாழ்வதற்கான காற்று இல்லை ஜோதிடர்கள் கேப்பையில் நெய் வடிகிறது என்று சொன்னால் ஏன் அதை நம்புகிறீர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிந்தார்கள்ஆனால் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்தண்ணீர் உள்ளதற்கான அறிகுறிகளை கண்டுபிடிப்பதற்கே இவ்வளவு காலமும் மிகுந்த பொருள் செலவும் நவீன உபகரணங்கள் ஆகியவை தேவைப்பட்டது என்றால் எவ்வாறு அந்த காலத்தில் உள்ளவர்கள் இதை கண்டு பிடித்தார்கள்எந்தவிதமான கருவிகளும் இல்லை அதுமட்டுமல்ல மின்சாரமே இல்லையோசித்துப்பாருங்கள் நம்மால் ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியுமா ? எவ்வளவு வேலைகள் தடைபட்டு விடுகின்றனஇவை போன்ற வசதிகள் எதுவும் இல்லாமலே எவ்வாறு இந்த சாதனைகளை செய்தார்கள்இந்த கண்டுபிடிப்பின் முறைகளை யாருக்கும் சொல்லாமல் மறைத்து விட்டார்கள் இதனால் தான் நமது ஆய்வு முடிவுகளை இன்றைய சமூகம் ஏற்றுக் கொள்வது இல்லைகாலம் கடந்து நிற்கும் அனைத்துமே அதனுடைய உண்மை தன்மை இல்லாவிட்டால் நிச்சயமாக கால வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டிருக்கும்எத்தனயோ விஷயங்களை நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள்ஒரு குழந்தை உருவாவது என்பது ஒரு காலத்தில் ஆணிடமிருந்து ஒரு வாயுவும் பெண்ணிடமிருந்து ஒரு வாயுவும் ஒன்று சேர்ந்து உருவாகிறது என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்பின்வந்த காலங்களில் இந்த கூற்று தவறு என்பதால் இப்படி ஒரு ஆய்வு இருந்தது என்பதற்கான அடையாளமே இப்போது இல்லைஇதை போன்றே எத்தனையோ கருத்துக்கள் வந்த வேகத்திலேயே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதுஆனால் ஜோதிடம் என்பது அப்படி அல்ல இது காலம் கடந்து நிற்கும் ஒரு கலையாகும்இதன் முக்கிய அம்சமே இது வேத காலம் தொட்டு வருவதுதான்இதனால் தான் இதன் ஜோதிட கலையை வேதத்தின் கண் என்பர்நமது ரிஷிகளும் முனிவர்களும் உருவாக்கி கொடுத்த இந்த கலை உலகின் பிற நாடுகளிலும் பயன்பட்டு வருகிறது என்றால் அது மிகையல்லநாம் உபயோகிக்கும் இந்த கால அளவு ஒரு மாதத்திற்கு முப்பது நாள் மட்டும் ஒரு வருடத்திற்கு ௩௬௫ நாட்கள் பன்னிரண்டு ராசிகள் ஒன்பது கிரகங்கள் வாரத்திற்கு  நாட்கள் என்பன எல்லாம் உலகில் உள்ள அனைத்து நாட்டினருக்கும் ஒரே மாதிரி யார் வகுப்பு எடுத்தார்கள் ? நமது தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள இந்த கால அளவு முறைகளையே உலகில் உள்ள அனைவரும் பின்பற்றி வருகிறார்கள் என்பது வெள்ளிடை.